Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ... காரைக்குடி முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா துவங்கியது! காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்மையைப் போற்றும் 10 நாள் விழா: கேரளாவில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2012
10:03

கேரள அரசு சமூக நலத்துறை சார்பில், பத்து நாள் மகளிர் திருவிழா கோழிகோட்டில் நடந்து வருகிறது. பெண்களை அனைத்து துறைகளிலும் சாதிக்க வைப்பது, சாதனை பெண்களை அடையாளம் காண்பது, அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அலசி ஆராய்வது என, முற்றிலும் பெண்களை மையப்படுத்தி, "தைரியம் ஜென்டர் பெஸ்ட் 2012 என்ற தலைப்பில் இந்த திருவிழா நடந்து வருகிறது. கருத்தரங்கு, கண்காட்சி, கலைநிகழ்ச்சி, திரைப்படத்திருவிழா என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகளிர் தினமான மார்ச் 8 ல் துவங்கி 17 ம் தேதி வரை கோழிக்கோட்டில் பத்து இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கேரளாவில் பல்வேறு துறைகளில் சாதித்த 101 பெண்கள் கவுரவிக்கப்படுகின்றனர். சுவப்ன நகரி என்ற இடத்தில் உள்ள அரங்கில் பாரம்பரிய உணவு திருவிழா, சுயஉதவிக்குழுக்களின் கண்காட்சி, சாதனை பெண்கள் பற்றிய போட்டோ கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு மாதிரி "மலைக்கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரள பாரம்பரிய கலைகளை விளக்கும், பொருட்கள் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது. கோழிக்கோடு கடற்கரையில் தினமும் மாலை 6 மணிக்கு, திரைப்பட நடிகைகள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நகரில் உள்ள தியேட்டர்களில், பத்து நாட்களும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பெண்கள் பற்றிய புத்தக கண்காட்சி, பெண் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவும், பெண்களுக்கிடையே விளையாட்டு போட்டிகளும் நடக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக, அரசு சார்பில் நடக்கும் "பெண்மையை போற்றும் இந்த திருவிழாவில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் பங்கேற்கின்றனர். மார்ச் 17 மாலை 6 மணிக்கு, கடற்கரையில் நடக்கும் நிறைவு விழாவில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மாநில முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொள்கின்றனர். விழாக்குழு ஒருங்கிணைப்பாளரும், மாநில சமூகநலத்துறை அமைச்சருமான எம்.கே.முனீர் கூறுகையில்,""முதன்முறையாக இந்த விழாவை நடத்துகிறோம். இனி ஆண்டு தோறும் இந்த "ஜென்டர் பெஸ்ட் நடக்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar