Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தணிகாசலம்மன் கோவிலில் மகா சண்டி ... மழைக்காக நந்தியம் பெருமானுக்கு நாகலிங்க மலர்களால் அர்ச்சனை மழைக்காக நந்தியம் பெருமானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சைவ தலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மது படையல்
எழுத்தின் அளவு:
சைவ தலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மது படையல்

பதிவு செய்த நாள்

25 மே
2019
11:05

சின்னமனுார்: குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சைவ தலமான சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் வளாகத்தில் சோணை கருப்பணசாமி சன்னதி உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இந்த சன்னதியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மது பாட்டில்கள் படையல் வைக்கப்படும். அன்று மட்டும் பக்தர்களுக்கு கறி விருந்து படைத்து விசேஷ பூஜைகள் நடைபெறும்.

அர்ச்சகர் க.ரகுராம் கூறுகையில், ‘‘தடைகளை தகர்க்கும் வல்லமை சோணை கருப்பணனுக்கு உள்ளது. தீராத பிரச்னைகளை சொல்லி முறையிடும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் போது, மது பாட்டில்களை காணிக்கையாக வழங்குகின்றனர். சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா 5 வாரங்கள் நடைபெறும். நான்காவதுவார திருவிழா நிறைவு பெற்ற பின் வரும் திங்களன்று, சோணை கருப்பண சாமி பொங்கல் விழா நடைபெறும். அன்று இரவு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மது பாட்டில்களை படையல் வைப்போம். நுாற்றுக்கணக்கில் மது பாட்டில்கள் நேர்த்திக்கடனாக வழங்கப்படும். சுவாமி சிலையில் கீழ் பகுதியில் 1படி(ஒன்றரை லி.,) கொள்ளளவு உடைய மண் பானை உள்ளது. இதில் பக்தர்கள் வழங்கிய மது பாட்டில்களை திறந்து ஊற்றுவோம். எவ்வளவு ஊற்றினாலும், அந்த சிறு மண் பானை நிறையாது. மது எங்கே செல்கிறது என்றும் தெரியாது. வாடை துளியளவும் வீசாது. அனைத்து பாட்டில்களும் ஊற்றி முடிந்த பின் கண் சிவந்து நிற்கும் கருப்பணனுக்கு காட்டும் தீபாராதனையை பார்த்தால் கஷ்டங்கள் விலகி செல்லும் என்பது ஐதீகம்,’’ என்றார்.


தொடர்புக்கு 75028 75381

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar