Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழமையான கோவில்களை புனரமைக்க ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலபைரவர் கோவிலில் நாளை அஷ்டமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
10:03

கும்பகோணம்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான 88 திருக்கோவில்களில் ஒன்றாக விளங்குவது கும்பகோணம் அம்மாச்சத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரீஷிவரரர் திருக்கோவில். இக்கோவிலில் உள்ள இறைவனை பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகள் பூஜை செய்து வழிபட்டதால் இத்தல சுவாமிக்கு சப்தரிஷிஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் ஸ்ரீ ஞானம்பிகை, பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகிய இவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக அம்பாள் சன்னதி எதிரில் 12 ராசிகள் கொண்ட தமிழ் எண்களுடன் கூடிய நவகிரக கரம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கால பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குபவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும். இப்பைரவை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோஷத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்த காலபைரவருக்கு நாளை மாலை 4.30 மணிக்கு அஷ்டமி பெருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வடமாலை அணிவித்தல் ஆகியவை நடைபெறவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar