Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோயிலில் ... வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதர் வைபவத்திற்காக கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அத்தி வரதர் வைபவத்திற்காக கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

28 மே
2019
11:05

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதர் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 1ல், அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தையொட்டி, அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் இருந்து, தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடு, தீவிரமாக நடக்கிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ல், அத்தி வரதர் வைபவம் நடக்கிறது. இந்த விசஷேத்தை ஒட்டி, கோவிலில் பல முன்னேற்பாடுகள் நடக்கின்றன.அதில் ஒரு பகுதியாக, அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியை, எல் அண்டு டி தனியார் நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.

இது குறித்து, இப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:மேற்கு ராஜகோபுரம் அருகே உள்ள, அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் தண்ணீரை, கிழக்குராஜ கோபுரம் அருகே உள்ள பொற்றாமரை குளத்தில் விடுவதற்கான பணி, 15ம் தேதி துவங்கியது. இதற்காக, பாசி படர்ந்துள்ள பொற்றாமரை குளம், துார் வாரி சீரமைக்கப்படுகிறது.இரு குளத்திற்கும் இடையே, 250 மீட்டர் நீளத்திற்கு, 10 அங்குலம் பைப் அமைக்கப்பட்டு உள்ளது.நீர் இறைப்பதற்காக, 60 எச்.பி., குதிரை திறன் உடைய இரண்டு நீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு மோட்டாரும், நொடிக்கு, 2,000 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன்கொண்டவை.மோட்டார்களை இயக்கிய இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில், குளத்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, கோவில் உதவி ஆணையர் மற்றும் நிர்வாக அறங்காவலர், ந.தியாகராஜன் கூறியதாவது: வரதராஜ பெருமாள் கோவிலில், வரும், 31ல் வசந்த உற்சவம் துவங்குகிறது. உற்சவத்தின் நிறைவாக, அனந்தசரஸ் தெப்பக்குளத்தில், ஜூன், 6ல், தீர்த்தவாரி நடைபெறும். அதன் பின், குளத்து நீர் இறைக்கும் பணி துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கடைசியாக, 1979ல், ஜூலை, 2ல், குளத்திலிருந்து அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு, ஆக., 18ம் தேதி வரை, விசஷே வைபவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar