Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கற்கள் வைத்து முன்னோருக்கு வழிபாடு! கவுமார மடாலயத்தில் கஜபூஜை வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வநாதஸ்வாமி கோவிலில் மார்ச் 18ம் தேதி மகாகும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2012
11:03

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் அருள்பாலித்து வரும் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாதஸ்வாமி (ருத்ரா÷க்ஷஸ்வரர்) திருக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் வருகிற 18ம்தேதி நடைபெற உள்ளது. இக்கோவிலில் விஸ்வநாதசுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. விஸ்வநாதசுவாமியை வழிபடுவதால் மறுபிறவி கிடையாது என புராணம் கூறுகிறது. இக்கோவில் பிரளய காலத்தில் கூட அழியாத அருள்நிறை தலமாகவும், தேவராஜபுரம் என போற்றி வழிபட்டதும், மகரந்த முனிவருக்கு சாபம் நீங்க பெற்ற தலம் என்ற சிறப்புடையதாகும். இக்கோவிலில் கடந்த இரு ஆண்டுக்கு முன் பொங்கல் திருநாளன்று பாம்பு வில்வஇலையால் சிவபெருமானுக்கு பூஜை செய்த தகவல் எங்கும் பரவியது.
சிறப்பு வாய்ந்த இக்கோவில் பெரும் பொருட்செலவில் திருப்பணி செய்யப்பட்டு அதன் கும்பாபிஷேகம் வருகிற 18ம்தேதி ஞாயிறு காலை 10.30மணிக்கு மேல் 11.30மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று வாஸ்துசாந்தியும் நடைபெற உள்ளது. நாளை முதல் யாகசாலை பூஜை தொடங்கி 18ம்தேதி முடிய 6காலம் யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. வரும் 18ம்தேதி காலை 10.30மணிக்கு திருக்கடங்கள் புறப்பட்டு விமானங்களை சென்றடைந்து கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலவர்கள் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு காஞ்சி மடாதி பதிகள், அமைச்சர்கள், ஆன்மீக பக்தர்கள், இந்து சமய அறலைய ஆட்சித்துறை அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் பலர் முன்னிலை வகிக்கின்றனர். அன்று மாலை மகாபிஷேகம், திருக்கல்யாணமகோத்சவம் நடைபெற்று பஞ்ச மூர்த்தி வீதியுலா நடைபெற உள்ளது. யாக சாலை பூஜையில் ஜபம், சதுர்வேத பாராயணம், திருமுறைப்பாராயணம், சிறப்பு நாதஸ்வர இன்னிசை கழ்ச்சிகள் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar