Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் ரூ.2.84 கோடி காணிக்கை வசூல் மீனாட்சி கோயில் நிலப் பட்டா மோசடி: சிக்கலில் அதிகாரிகள் மீனாட்சி கோயில் நிலப் பட்டா மோசடி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாஷ் மானசரோவர் யாத்திரை துவங்கியது
எழுத்தின் அளவு:
கைலாஷ் மானசரோவர் யாத்திரை துவங்கியது

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
11:06

புதுடில்லி : அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு, இந்தாண்டுக்கான புனிதப் பயணம், நேற்று துவங்கியது. இதை, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் துவக்கி வைத்தார்.அண்டை நாடான, சீனாவில் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஹிந்துக்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர்.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் பாஸ் வழியாகவும், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா பாஸ் வழியாகவும், புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை, வெளியுறவு அமைச்சகம் செய்துள்ளது. இந்த ஆண்டு, லிபுலேக் பாஸ் வழியாக, தலா, 60 யாத்ரிகர் கொண்ட, 18 குழுக்களுக்கும்; நாதுலா பாஸ் வழியாக, தலா, 50 யாத்ரிகர் கொண்ட, 10 குழுக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.லிபுலேக் பாஸ் மார்க்கமாக புனிதப் பயணம் மேற்கொள்ளும், 58 யாத்ரிகர் கொண்ட முதல் குழுவின் பயணம் நேற்று துவங்கியது. முன்னாள் வெளியுறவு செயலரான, வெளியுறவு அமைச்சர், எஸ்.ஜெய்சங்கர், இந்தப் பயணத்தை துவக்கி வைத்தார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:விதிகளுக்கு உட்பட்டு, மிகவும் பாதுகாப்பானதாக இந்த ஆன்மிக பயணம் அமைய வாழ்த்துகிறேன். இந்தியா மற்றும் சீனா இடையேயான மக்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையில், இந்த பயணம் அமைகிறது. இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ள சீனாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar