பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
03:06
மயிலம்: திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.மயிலம் அடுத்த திருவக்கரையில் உள்ள வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு வழிபாடுகள் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
பின்னர் வக்கிரகாளியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஜோதி காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் ஜோதியை தரிசனம் செய்தனர். பவுர்ணமி விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் ரவி, குருக்கள் சேகர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.