Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை அருகே நத்தம் ரோட்டில் கடவுளாக ... வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் நளன் குளம் புனிதத்தை காக்க கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் நளன் குளம் புனிதத்தை காக்க கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:06

காரைக்கால்: திருநள்ளார் நளன் குளத்தில் புனித தன்மையை காத்திட பக்தர்கள் துணிகளை குளத்தில் விட்டு செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சனி பரிகார ஸ்தலமான திருநள்ளார், சனீஸ்வரர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், சனீஸ்வரரை தரிசிக்க செல்லும் முன் கோயில் எதிரில் உள்ள நளன் குளத்தில் நீராடி விட்டு தாங்கள் அணிந்த ஆடைகளை, நளன் குளக்கரையில் விட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

ஆனால், பக்தர்கள் குளத்தில் குளித்து முடித்த, தங்கள் ஆடைகளை குளத்திலேயே கழற்றி விடுவதால், குளத்தில் தண்ணீர் மாசுபடுகிறது.இதனால், கோயில் நிர்வாகம், வாரத்திற்கு ஒரு முறை குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது.

இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்படுகிறது.இதனால் கலெக்டர் விக்ரந்தராஜா மற்றும் கோயில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதில், நளன், குளத்தின் புனிதத்தை காத்திட வரும் ஜூலை 1ம் தேதி முதல் நளன் குளத்தில் துணிகளை பக்தர்கள் விட்டு செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar