Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடி மவுனகுரு சுவாமி கோயிலில், ... பழநியில் சண்முகா நதியை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுக்கோட்டை அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுக்கோட்டை அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
12:06

 புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே, 21 ஐம்பொன் சிலைகள், நேற்று கண்டெடுக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், பேரையூர் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து, சில அடி துாரத்தில், கண்மாய் பகுதியில், சுப்பன், 56, என்பவருக்கு, சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் உள்ள மரங்களை அகற்றி, சுத்தம் செய்யும் பணி, நேற்று நடந்தது.அப்போது, அங்கு இருந்த, வாகை மரத்தை, வேரோடு அகற்ற, ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன், குழி தோண்டப்பட்டது. அப்போது, பழங்கால ஐம்பொன் சிலை ஒன்று, கிடைத்தது.

இதையடுத்து, அந்த இடத்தில், மேலும் தோண்ட, தோண்ட, ஐம்பொன் சிலை குவியல் கிடைத்ததால், அப்பகுதியினர் திகைத்தனர்.இது குறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த, திருமயம் தாசில்தார், சுரஷே் மற்றும் நமணசமுத்திரம் போலீசார், சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில், மேலும் தோண்டிப் பார்த்தனர். அப்போது, மேலும், சில சிலைகள் கிடைத்தன.சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், வினாயகர், நடராஜர், மாணிக்கவாசகர் சிலைகள், பீடம், சூலாயுதம் உள்ளிட்ட, 21 பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பின், சிலையின் காலம், மதிப்பு தெரியவரும் என, வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar