Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை இன்று அடைப்பு இதற்கும் தினக்கூலியா? கோவிலில் அவலம்! இதற்கும் தினக்கூலியா? கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
11:06

திருவண்ணாமலை, ஜூன் 20-திருவண்ணாமலையில், 1,500 ஆண்டுகள் பழமையான, முருகன், விநாயகர் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலையை அடுத்த, தி.வலசை கிராம விவசாய நிலத்தில், 16ல், இரண்டு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து, கிராம மக்கள், திருவண்ணாமலை தொல்லியல் மையத்துக்கு, தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, மைய தலைவர், நீதிதாஸ், தொல்லியல் அறிஞர், ராஜவேலு தலைமையிலான குழுவினர், அங்கு சென்று, ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, தொல்லியல் அறிஞர், ராஜவேலு கூறியதாவது:-கண்டெடுக்கப்பட்ட, முருகன் மற்றும் கதிர் விநாயகர் கற்சிலைகள், 1,500 ஆண்டுகள் பழமையானவை என, தெரிய வந்துள்ளது. இரண்டும், பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.தாமரை மலரின் மேல், நின்ற நிலையில் இருக்கும் முருகன் சிலை, அரிதான ஒன்று. ஆறுமுகனின், மூன்று முகங்கள் மட்டுமே தெரியும் வகையில், சிலை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.சிலையின் இடது கையில் உள்ள வில்லை, முருகன் திருப்பி பிடித்து உள்ளார்.அதனால், போர் முடிந்த பின் காட்சியாக, சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலையின், வலது கீழ்ப்புறத்தில், ஏழு வரிகளுடன் கூடிய, சிறிய எழுத்து பகுதியும் இடம் பெற்றுள்ளது.அங்கு, செங்கற்களால் கட்டப்பட்ட, ஒரு கோவில் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் கூடிய, கதிர் விநாயகர் சிலை குறித்து, ஆய்வு நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar