Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ... ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ஜூலை 4ல் ஆனி பிரம்மோற்ஸவம் ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:06

உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் வரும், ஜூலை 4ல் நடக்கிறது; வரும், 30ல் யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. உடுமலை, தளி ரோடு செங்குளம் அருகே, உடுமலை திருப்பதி, ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. முழுவதும் கற்கோவிலாக, கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம் என சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளிலும், எம்பெருமாள் அவதார மூர்த்திகளான, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ  விஷ்வக்ேசனர் ஆகியோரும்  தனித்தனி சன்னதிகளிலும் எழுந்தருளுகின்றனர். மேலும், ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோவில், கும்பாபிஷேகம், வரும் ஜூலை 4ம் தேதி நடக்கிறது. மகா கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் வரும், வரும் 30ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. கோவில் திருப்பணிகள் மற்றும் யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து பாலாஜி சேரிடபிள்  டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது : உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், பணிகள் நிறைவு பெற்று, வரும் 30ம் தேதி கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் துவங்குகின்றன. வேத, திவ்ய பிரபந்த மந்திரங்கள் முழங்க, எட்டு கால பூஜைகள் நடக்கின்றன. கும்பாபிஷேகத்திற்கு, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வராஹதேசிக மகா தேசிகன் சுவாமிகள், ஸ்ரீ வில்லிபுத்துார்,  ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீமத் அேஹாபிலமடம் ராஜகோபாலன் மற்றும் தாமல் ஸ்ரீ ராமகிருஷ்ண சுவாமிகளின், ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மேலும் தினமும், பக்தி, கலாசார நிகழ்ச்சிகள், ஐந்து நாட்களும் தொடர்ந்து அன்னதானம், பக்தர்களுக்கான வசதிகள் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார். இதில், நிர்வாக அறங்காவலர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar