Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு ... அய்யாவாடியில் நிகும்பலா யாகம் அய்யாவாடியில் நிகும்பலா யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் தெப்ப திருவிழாவிற்கு டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்ப முடிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவில் தெப்ப திருவிழாவிற்கு டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்ப முடிவு

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2019
02:07

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும், 26ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடை பெறும் தெப்பத் திருவிழாவிற்காக, குளத்தில், டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்ப, கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையை ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.ஆடிக்கிருத்திகையை ஒட்டி, மலையடிவாரத் தில் உள்ள சரவண பொய்கை என்கிற திருக்குளத்தில், மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆடி அஸ்வினி, 24ம் தேதியும், ஆடி பரணி, 25ம் தேதியும், ஆடி கிருத்திகை, 26ம் தேதியும் நடைபெற உள்ளது.ஆடி கிருத்திகையையொட்டி, 26ல் துவங் கும் தெப்பத் திருவிழா, 28ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், கடந்தாண்டு பருவ மழை இல்லாததால், கோவில் குளத்தில் தண்ணீர் மிக குறைந்த அளவில் உள்ளது.இதில் தண்ணீரில் தெப்பம் கட்டுவதற்கும், தெப்பத் திருவிழா நடத்துவதற்கும் முடியாது. மேலும் நேற்று (ஜூலை  2ல்) வரை, திருத்தணியில் போதிய மழை பெய்யாததால், குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை.ஆகையால், முதற்கட்டமாக தெப்பம் கட்டுவதற்கு, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, திருக்குளத்தில் விடுவதற்கு, கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, ஒரு டிராக்டர் தண்ணீர், 600 ரூபாய் வீதம், திருக்குளத்திற்கு விடுவது என, தீர்மானித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் விட பக்தர்களுக்கு அழைப்புமுருகன் கோவில் திருக்குளத்தில் தண்ணீர் இல்லாத தால், தெப்பத் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டிராக்டர் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இருப்பினும், டிராக்டர்கள் மூலம் கொண்டு வரும் தண்ணீரால் குளம் நிரம்பாது என்பதால், திருக்குளத்திற்கு, காணிக்கை முறையில், தண்ணீர் விட நினைக்கும் பக்தர்கள், தங்களது பெயர்களை கோவில் நிர்வாகத்திடம் பதிவு செய்யலாம்.இவ்வாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar