நடுவீரப்பட்டு அருகே மலையாண்டவர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2019 03:07
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஜீவசமாதியடைந்த சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ் வரர் கோவி லில் சித்தர் பரங்கிப்பேட்டையார் என்கிற குழந்தைவேல் சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தார்.அக்கோவிலில் உள்ள பிரணவ தீர்த்தத்தில் முக்தியடைந்து ஜல சமாதி அடைந்தார்.அவருக்கு மலையின் தென்மேற்கு பகுதியில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது.
அவரது நினைவாக ஜீவசமாதியில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று (ஜூலை 2ல்) அமாவாசையை முன்னிட்டு மதியம் 1:00 மணிக்கு ஜீவ சாமதியடைந்த இடத்தில் உள்ள பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.