Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முறையூரில் வடபத்திர காளி அம்மன், ... புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை துவங்கியது புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2019
05:07

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. அன்று காலையில் அம்மனுக்கு விசேஷ திரவிய அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் அங்காளம்மனை இரவு 11.30 மணிக்கு கோவிலில் இருந்து மேளதாளம், சிவ வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நுாற்றுக்காணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவாக மகா தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் செல்வம் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, வேலுார், விழுப்புரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

நெரிசல்: வழக்கமான கூட்டத்தை விட நேற்று திடிரென பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. பிரதான சாலையில் இருந்து பக்தர்கள் ஊஞ்சல் மண்டபத்திற்கு செல்ல முடியாமல் தினறினர். ஒத்தவாடை தெருவில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையின் துவக்கத்தில் இரவு 12.30 மணியளவில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

விளக்கு வசதி இல்லை: கோவிலுக்கு பக்தர்கள் வரும் வாகனங்களில் பெரும் பகுதியை சிறுதலைப்பூண்டி சாலையில் விவசாய நிலங்களில் நிறுத்துகின்றனர். நேற்று வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நெருக்கமாக வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இந்த இடங்களில் விளக்கு வசதி இல்லாமல் வாகனங்களை வெளியே எடுக்கவும், பக்தர்கள் தங்கள் வாகனங்களுக்கு செல்லவும் மேடு பள்ளங்களில் கடும் அவதிப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar