Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ... மழை வேண்டி குதிரை எடுப்பு விழா மழை வேண்டி குதிரை எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்திவரதர் தரிசனம்: சிறப்பு நுழைவு ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அத்திவரதர் தரிசனம்: சிறப்பு நுழைவு ரத்து

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2019
11:07

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் வைபவத்திற்கு, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாலை நேர சிறப்பு நுழைவு, இனி கிடையாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், திங்கட்கிழமை துவங்கியது. வெளியூர் பக்தர்கள் இந்நிகழ்வு, 40 ஆண்டுகளுக்கு பின், நடைபெறுவதால், அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்து, அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள், கோடை உற்சவம், கருடசேவை உற்சவம் போன்ற உற்சவ நாட்கள் தவிர, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால், மாலை நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருவதால், அவர்களுக்கு அனுமதி மறுக்க கோவில் நிர்வாகம் தயங்கியது. இதனால், மாலை நேரத்திலும், அத்தி வரதரை தரிசிக்க, வெளியூர் பக்தர்களுக்கு நேற்று முதல், அனுமதி வழங்கப்படுகிறது.

வருத்தம்: உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட மாலை, 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை தரிசன நேரத்தில், வெளியூர் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், உள்ளூர் பக்தர்களுக்கு எந்த சிறப்பு நுழைவும் இனி கிடையாது. மாலை நேரத்தில், சிறப்பு நுழைவு கிடையாது என்பதால், ஆதார் அட்டையை பதிவு செய்து, ரசீது பெற, உதவி மையங்களில் கால் கடுக்க நின்ற பக்தர்கள், வருத்தம் தெரிவிக்கின்றனர்.

5:00 மணி வரை மட்டுமே தரிசனம்:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், கோடை உற்சவம் இன்று துவங்குவதால், அத்தி வரதரை, மாலை, 5:00 மணி வரை மட்டுமே, பக்தர்கள் தரிசிக்க முடியும். வரும், 10ம் தேதி வரை, கோடை உற்சவமும், 11ல், ஆனி கருடசேவையும், 25 முதல் ஆக., 4 வரை, ஆடி பூரம் உற்சவமும், ஆக., 13 மற்றும் 14ல், ஆளவந்தார் சாற்றுமுறையும், 15ல், ஆடி கருடசேவையும் நடைபெற உள்ளது. இந்த நாட்களில், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar