Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ... திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக பாரம்பரிய சின்னமாகுமா வெட்டுவான்கோவில்!
எழுத்தின் அளவு:
உலக பாரம்பரிய சின்னமாகுமா வெட்டுவான்கோவில்!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
11:07

துாத்துக்குடி, : கோவில்பட்டி, கழுகுமலையிலுள்ள வெட்டுவான்கோவில் மற்றும் சமணச் சிற்பங்களை, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இருக்கிறது, கழுகுமலை.இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க வெட்டுவான்கோவில், கழுகாசமூர்த்தி முருகன் கோவில், சமணர் சிற்பத் தொகுப்பு ஆகியவை உள்ளன. இவை, முற்காலப் பாண்டியரின் கலைப்பாணிக்கு ஆதாரமாக உள்ளன. இதில் வெட்டுவான் கோவில், கடினமான பாறை அடுக்குகளாலான, பெரிய மலையை, 7.50 மீ., ஆழத்திற்கு, சதுரமாக வெட்டியெடுத்து, அதன் நடுப்பகுதி பாறையில், கோவில் அமைத்துள்ளனர். சிற்ப வேலைப்பாடு நிறைந்த, ஒற்றைக் கற்கோவிலான இது, முழுமை பெறவில்லை.

இது, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, எல்லோரா கைலாசநாதர் கோவில் போன்ற வேலைப்பாடுடையது. இத்தகைய கோவில், தமிழகத்திலேயே இது ஒன்று தான் என்பது, இதன் மற்றொரு சிறப்பு.இந்தக் கோவிலில் தான், மிருதங்கம் வாசிக்கும், தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும், புன்னகை தவழும் முகத்துடன் காட்சிஅளிக்கின்றன. இந்த மலையின் கிழக்கு சரிவில், 100க்கும் மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

இவை, பாண்டிய மன்னன், பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை. சிலைகளின் கீழ், அவற்றை உருவாக்கியவரின் பெயர் விபரங்கள், வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு, சமணப் பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளன.முற்காலப் பாண்டியர்களின் கலைப் பாணியில் அமைந்த மரபுச் சின்னங்கள் இவை.மிகச் சிறந்து விளங்கும், கழுகுமலை வெட்டுவான்கோவில் மற்றும் சமணச் சிற்பங்களை, உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar