Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ விநாயகர் கோவில் விழா வளசரவாக்கம், கோவில் குளங்களை தூர் வாரும் மக்கள்: மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்க கோரிக்கை வளசரவாக்கம், கோவில் குளங்களை தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
12:07

ஆலந்துார்:நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷே கம், காஞ்சி சங்கராச்சாரியார் முன்னிலையில், நேற்று (ஜூலை., 15ல்) விமரிசையாக நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நங்கநல்லுார், இரண்டாவது பிரதான சாலையில் அமைந்துள்ள, வரசித்தி விநாயகர் கோவிலில், 2015ல், வெள்ளநீர் புகுந்து, கட்டடங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது, திருப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மஹா கும்பாபிஷேகம், நேற்று  (ஜூலை., 15ல்) விமரிசையாக நடந்தது.

இதை முன்னிட்டு, 12ம் தேதி, யாகசாலை துவக்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, கணபதி, ஸ்ரீசுக்த, ஆவஹந்தி, நவக்கிரஹ ஹோமங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று  (ஜூலை., 15ல்), காலை, 5:30 மணி முதல், ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

பின், ஜபம், ஹோமம், வேதபாராயணம், மஹா பூர் ணாஹுதி, யாத்ரா தானம் நடந்தன.காலை, 8:30 மணிக்கு, கடப்புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, விமான கலசங்களுக்கு, கும்ப நீர் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.இந்த வைபவம், காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந் திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கும்பகோணம், தினகர சர்மா தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை தரிசித்தனர். அவர்களுக்கு, புனித நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று  (ஜூலை., 15ல்) மாலை, 3:30 மணிக்கு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இரவு, உற்சவ மூர்த்திகளின் திருவீதி புறப்பாடும் நடந்தது. இன்று  (ஜூலை., 16ல்) முதல், ஆக., 29ம் தேதி வரை, மண்டலாபிஷேகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar