Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூரில் சந்திர கிரஹண நிகழ்வு ... அறநிலைய கமிஷனர் ஆஜராக கோர்ட் உத்தரவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில் ஆடி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
03:07

கோவை: கோவை ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில், ஆடி உற்சவ நிகழ்ச்சி நேற்று (ஜூலை., 16ல்) துவங்கி யது.ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கம் சார்பில், ஆண்டு தோறும், ஆடி மாதம் முழு வதும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டு, ஆடி உற்சவ நிகழ்ச்சி, நேற்று (ஜூலை., 16ல்) துவங்கியது.நிகழ்ச்சியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஐயப்ப பூஜா சங்கம் சார்பில், 700 ஜாதகங்கள் அடங்கிய, ’ஜாதகங்களின் தொகுப்பிதழ்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.புத்தகத்தின் முதல் பிரதியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் வெளியிட, சொற்பொழிவாளர் ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். இந்த ஜாதக தொகுப்பிதழ், தமிழகம் முழுவதும், இலவசமாக வழங்கப் படுகிறது.நேற்று துவங்கிய ஆடி உற்சவ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாள்தோறும் மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நேற்றைய (ஜூலை., 16ல்) நிகழ்ச்சியில், ’ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தரம்’ என்ற தலைப்பில், ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் பேசுகையில், ”ஜீவ ஆத்மா, இறைவனுக்கு சொந்தமானது என நினைக்காமல், தன்னுடையது என நினைத்தால், அது அகங்காரம் ஆகிறது. தவறு செய்பவர்களை எல்லாம், அழிக்க நினைத்தால், பூமியில் உள்ள அனைவரையும் அழிக்க வேண்டும். அதனால் அவர் களின், தவறை சுட்டிக்காட்டி, திருத்த வேண்டும்,” என்றார்.நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar