கடலுார் பராசக்தி மாரியம்மன் கோவிலில், செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 02:07
கடலுார், புதுக்குப்பம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பாரசக்தி மாரியம்மன் கோவிலில், 54ம் ஆண்டு செடல் உற்சவத்தையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.
கரகம் வீதியுலா வந்து எல்லை கட்டுதல் நடந்தது.பின், சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் பராசக்தி மாரியம்மன் கோவிலை வந்ததும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.சந்தனகாப்பு அலங்காரம் செய்து, கொடியேற்றம் நடந்தது. இரவு திருக்கல்யாணம் நடந்தது. இன்று 26ம் தேதி காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மதியம் 2:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு செடல் போடுதல், 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது.