Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பண்ணசாமி கோவில் திருவிழா: ... வத்திராயிருப்பு கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் வத்திராயிருப்பு கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதர் நின்ற கோல தரிசனம்: பக்தர்களுக்கு கூடுதல் வசதி
எழுத்தின் அளவு:
அத்தி வரதர் நின்ற கோல தரிசனம்: பக்தர்களுக்கு கூடுதல் வசதி

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2019
11:07

காஞ்சிபுரம் : அத்தி வரதர் நின்ற கோலம் தரிசனத்திற்கு, பக்தர்கள் அதிகம் பேர் வருவர் என்பதால், கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்படும், என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், 1ம் தேதி முதல் நடைபெறுகிறது. தற்போது, சயன கோலத்தில் இருக்கும் அத்தி வரதர், ஆகஸ்ட், 1ம் தேதி முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார்.

அத்தி வரதர் நின்ற கோலத்தை காண, பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அத்தி வரதர் வைபவம், 28 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று, ஏகாதசி என்பதால், 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்தி வரதரை தரிசித்திருப்பர். காலை, கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்களை தடுத்து நிறுத்தி, உள்ளே அனுப்பி வைத்தோம்; யாரையும் திருப்பி அனுப்ப வில்லை.

பாதுகாப்பு ஏற்பாடு: ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதரை காண, அதிகப்படியான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்படும். கோவில் வடக்கு மாட வீதியில், இரு இடங்களில், பெரிய பந்தல் அமைத்து, அதில், 20 ஆயிரம் பேரை தடுத்து வைத்து, பின், கோவிலுக்குள் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, 70 கழிப்பறைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன; பிற வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி, சிலர் உயிரிழந்தனர் என, வதந்தி பரப்பியுள்ளனர். வதந்தி பரப்புவோரை கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

31 பக்தர்கள் மயக்கம்: நேற்று காலையில் இருந்து, மாலை வரை, அத்திவரதரை காண கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு, 31 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குள், கூட்டத்தில் சிக்கி, நான்கு பேர் உயிரிழந்தனர் என, வதந்தி பரவியதால், கோவில் வளாகத்தில், பக்தர்கள் இடையே பீதி ஏற்பட்டது. இருப்பினும், பொது தரிசனத்தில் கூட்டம் குறையவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar