Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலங்காநல்லுார் அருகே கல்லணை ... திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கொட்டப்படும் கட்டட இடிபாடுகள் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் வளைகாப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2019
05:08

திருவொற்றியூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வடிவுடையம்மன்,  அகிலாண்டேஸ்வரி, பொன்னி அம்மனுக்கு வளைகாப்பு ஊஞ்சல் உற்சவம் நிகழ்வு,  விமரிசையாக நடந்தது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது. ஆண்டு தோறும் ஆடி மாதம், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வடிவுடையம்மன் உற்சவ தாயாருக்கு, வளைகாப்பு நிகழ்வு சிறப்பாக  நடக்கும்.

அதன்படி, நேற்று முன்தினம் (ஆக., 3ல்) இரவு, வசந்த மண்டபம் முழுவதும், வண்ண
கண்ணாடி வளையல்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.சிறப்பு மலர்  அலங்காரத்தில், உற்சவ தாயார், மண்டபத்தின் ஊஞ்சலில் எழுந்தருளினார். 16  வகையான முளை கட்டிய பயிறுகள், உணவு பண்டங்களை துணியில் கட்டி,  வயிற்றில் கட்டினர்.

மங்கல வாத்தியங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க, வண்ண கண்ணாடி வளையல்கள் அணிவித்து, வளைகாப்பு நிகழ்வு நடந்தது.அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ’ஓம் சக்தி... பராசக்தி’ என, பக்தி பரவசம் அடைந்தனர். நிறைவாக ஊஞ்சல் சேவை நடந்தது.

பக்தர்களுக்கு, வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.கோவில் கருவறை மண்டபமும், வண்ண கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழாவில், கோவில் உதவி கமிஷனர், சித்ரா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சன்னிதி தெருவில் உள்ள, அகத்தீஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும்; ஜீவன்லால் நகரில் உள்ள, பொன்னியம்மனுக்கும், ஆடிப்பூர வளைகாப்பு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar