பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2019 11:08
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் ஆடி லட்சார்ச்சனை விழா இன்றுடன் முடிவுகிறது. நாளை (ஆக.,11ல்) காலையில் லட்சார்ச்சனை வேள்வி நடக்கிறது.
பழநி பெரிய நாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆக.,10 வரை தினமும் மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை நடக்கிறது. (நாளை) ஆகஸ்ட் 11ல் வேள்வி நடைபெறவுள்ளது. நேற்று நான்காம் ஆடிவெள்ளியை முன்னிட்டு, பெரியநாயகியம்மனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது. வரலட்சுமி விரத்தை முன்னிட்டு பெண்கள் பலர் பக்தர்களுக்கு மஞ்சள் கிழங்கு, வளையல் வழங்கினர். திருஆவினன்குடி கோயில் துர்கையம்மன், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தனி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, அடிவாரம் இட்டேரி ரோடு அரசமரம் சப்பாணி காளியம்மன்கோயில், ரெணகாளியம்மன்கோயில், நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணி சமேத, கைலாசநாதர் கோயில்களிலும் லட்சார்ச்னை, ஆடிவெள்ளி வழிபாடு நடந்தது.