Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரகண்டநல்லூர் அம்மன் கோவில்களில் ... லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவ ஹோமம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
11:08

திருநெல்வேலி, : சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், நேற்று மாலை நடந்த ஆடித்தபசு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், ஆடித்தபசு விழா ஆக. 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் ரதவீதி உலா நடந்தது. 9ம் திருநாளான ஆக. 11ல் தேரோட்டம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசுக் காட்சி நேற்று நடந்தது. நேற்று மாலையில் சுவாமி சங்கர நாராயணர், வெள்ளி ரிஷபவாகனத்தில் தெற்குரத வீதி தபசு பந்தலை அடைந்தார். தபசு மண்டபத்தில் கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் தவம் செய்யும் கோலத்துடன் தங்கச்சப்பரத்தில் தவசு பந்தலுக்கு வந்தார். சுவாமியை, அம்பாள் மூன்று முறை வலம் வந்தார், பிறகு சுவாமி, அம்பாளுக்கு பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் வைபவம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். பக்தர்கள் சங்கரா, நாராயணா.. என பக்தி கோஷங்களை எழுப்பினர். இரவு 12:00 மணிக்கு சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் தபசு பந்தலுக்கு வந்து அம்பாளுக்கு சங்கரலிங்கமாக காட்சி கொடுத்த இரண்டாம் தவசுக்காட்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar