Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓமலூர் கருட சேவையில் காட்சியளித்த ... வெள்ளவேடு அருகே தேவி எல்லையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழப்பாடியில் பூஜைக்கு பின் மழை: பக்தர்கள் மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
03:08

வாழப்பாடி: பூஜைக்கு பின், மழை பெய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வாழப்பாடி அருகே, ஆத்துமேடு, காமராஜ் நகர், பெரியாற்றின் கரையில், பழமையான பெரியாண்டிச் சியம்மன் கோவில் உள்ளது. அங்கு, கோவில் குல தெய்வ பங்காளிகள் கூடி, வறட்சி நீங்க, மழை பெய்ய வேண்டி, நேற்று(ஆக., 13ல்), ’பாப்பூஜை’ எனும் விழாவை நடத்தினர். அதில், அம்மனுக்கு புத்தாடை அணிவித்து, மலர்மாலை அலங்காரம் செய்தனர். பின், பொங்கலிட்டு, ஆட்டு கிடா, சேவலை பலிகொடுத்து, திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பூஜைக்குப்பின், மாலையில் மழை பெய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கூழ் வார்த்தல் உற்சவம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, பாலமுத்து கருமாரியம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் உற்சவம், நேற்று (ஆக., 13ல்) நடந்தது. அதில், மழை பெய்ய, மக்கள் சுபிட்சம் பெற வேண்டி, கேழ்வரகு, கம்பு உள்ளிட்டவற்றால் தயாரித்த கூழ், சீர் உள்ளிட்ட பொருட்களை, ஏராளமான பெண்கள் கொண்டு வந்து, கோவில் வளாகத் தில், பூஜை நடத்தினர். பின், பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

பால்குட ஊர்வலம்: மழை பெய்ய வேண்டி, ஆத்தூர் அருகே, கல்லாநத்தம், மாரியம்மன் கோவிலில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின், மீண்டும் கோவிலுக்கு திரும்பிய பக்தர்கள், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, வழிபட்டனர். அப்போது, புஷ்ப அலங்காரத்தில், அம்மன் காட்சியளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar