மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) முயற்சியில் வெற்றி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 01:08
சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் சாதகமாக இருப்பதால் மாதம் முழுவதும் நற்பலன் கிடைக்கும். செப்.7 முதல் புதன் நன்மை தருவார். செவ்வாயால் மனதில் பக்தி எண்ணம் மேம்படும். முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு கூடும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனதில் தளர்ச்சி ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் அவரது 9-ம் இடத்துப் பார்வை சாதகமாக உள்ளதால் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். தேவையான பொருட்கள் வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. சுக்கிரனால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்.10க்கு பிறகு உறவினரால் உதவி கிடைக்கும். ஆக. 26,27ல் பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பணம் கிடைக்கும். ஆக.30,31ல் புத்தாடை, அணிகலன்கள் சேரும். ஆக.21,22,செப்.17ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் செப்.1,2ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்களில் போலீஸ், ராணுவத்தினர் உயர்ந்த நிலையை அடைவர். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆக.21க்கு பிறகு அரசு பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஆக.18,19,20 செப்.15,16ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். செப்.7 க்கு பிறகு தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு சூரியனின் பலத்தால் வியாபாரம் சிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். ஆக.21 க்கு பிறகு அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பகைவரால் இடையூறு வரலாம். செப்.5,6ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும்.
ஆக.23,24,25,28,29ல் பண விரயம் ஏற்படலாம். முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். ஆன்மிகம் தொடர்பான பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். சனி பகவானால் சிலர் வெளியூரில் தங்க நேரிடலாம் கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சிலருக்கு பதவி தேடி வரும். செப்.3,4ல் குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் புதன் சாதகமற்று இருப்பதால் விடாமுயற்சியுடன் படிப்பது அவசியம். இருப்பினும் குருபார்வையால் ஓரளவு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். செப்.7 க்கு பிறகு ஆசிரியர்களின் ஆலோசனையும், உதவியும் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். நெல், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் மூலம் அதிக வருமானம் வரும். செப்.7க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர். ஆக.30,31 சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். செப்.7,8,9ல் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும்.
* நல்ல நாள்: ஆக.18,19,20, 21,22,26,27,30,31, செப்.5,6,7,8,9,15,16,17 * கவன நாள்: செப்.10,11 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 3,9 * நிறம்: சிவப்பு, மஞ்சள்