Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ... பழநியில் விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் செய்யும் பணி மும்முரம் பழநியில் விநாயகர் சதுர்த்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொற்றாமரைக்குள நீர் அத்தி வரதருக்கு வேண்டாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொற்றாமரைக்குள நீர் அத்தி வரதருக்கு வேண்டாம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
11:08

 சென்னை : காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்து நீரால் தற்போது நிரப்ப வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த அசோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் குளத்திற்குள் அத்தி வரதர் சிலை இருந்ததால் நீண்ட நாட்களாக துார் வாரி சுத்தம் செய்யப்படவில்லை. தற்போது அத்தி வரதர் சிலை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதால் சுத்தம் செய்து துார் வார இது உகந்த நேரம். எனவே குளத்தை துார் வாரி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு கோவில் குளத்தை சிறப்பு பிளீடர் மகாராஜா, கூடுதல் பிளீடர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.குளத்தில் நிரப்பப்பட உள்ள நீரின் தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், பொற்றாமரை குளத்து நீர் குடிப்பதற்கு தகுதியானது தான். அந்த தண்ணீருடன் ஆழ்துளை கிணற்று நீரையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதி ஆதிகேசவலு, சிலை வைக்கப்படும் இடத்தை சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் மகாராஜா அத்திவரதர் சிலை சுத்தமான தண்ணீரில் உள்ளது. பொற்றாமரை குளத்து நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது; அறிக்கை வர வேண்டியதுள்ளது என்றார். இதையடுத்து, அறிக்கை வரும் வரை பொற்றாமரை குளத்து நீரால் அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தினார். விசாரணையை 22 க்கு தள்ளிவைத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar