Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் முத்தாலம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு ஹோமம் முத்தாலம்மன் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருளப்பட்டி காணியம்மன் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
இருளப்பட்டி காணியம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
12:08

அரூர்: இருளப்பட்டியில், நேற்று நடந்த, காணியம்மன் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், காணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர்த்திருவிழா கடந்த, 13ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 15ல், கொடியேற்றுதல், 19ல், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை சுற்றி வந்து, நிலை நிறுத்தினர். தேரின் மீது, உப்பு, மிளகு, முத்துக்கொட்டை மற்றும் நவதானியங்களை இறைத்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், அரூர் கிளை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று முதல், வரும், 25 வரை, புதுப்பட்டி மற்றும் பாப்பம்பாடியில் தேர்கடை திருவிழாவும், பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, தோளனூரில் எருது விடுதல், முனி பிடிக்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய, ஆறு பஞ்., சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar