ராமநாதபுரம்: ராமநாதபுரம் பி1 போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அமைந்துள்ள நினைத்ததை முடிக்கும்வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று 28ல் நடந்தது.
ராமநாதபுரம் பி 1 போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அமைந்துள்ள நினைத்ததை முடிக்கும் வெற்றி விநாயகர் கோயில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் 27ம் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் காலை 7:00 மணிக்கு மங்கள இசை மற்றும் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது.
மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, புண்யாகவாசனம், முதல்கால யாக பூஜையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைநடந்தது.நேற்று 28ல் காலை 6:45க்கு முதல் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாட்டுடன் விமானம், ஸ்துாபி கலச மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், சிறப்பு அலங் காரம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி., உட்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். பகல் 11:00 மணி முதல் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பி 1 போலீஸ் ஸ்டேஷன் போலீசார் செய்திருந்தனர்.