பதிவு செய்த நாள்
30
ஆக
2019
01:08
சென்னை, ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, கேரளா மாநிலம், கொச்சுவேலி மற்றும் எர்ணாகுளத்துக்கு, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, செப்., 9, இரவு, 7:00 மணிக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில், மறுநாள் பகல், 1:15க்கு, கேரளா மாநிலம், கொச்சுவேலி சென்றடையும்
கொச்சுவேலியில் இருந்து, செப்., 10, மாலை, 6:05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 11:20க்கு, சென்னை சென்ட்ரல் வந்துஅடையும் சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, செப்., 11 இரவு, 7:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள், காலை, 8:45க்கு எர்ணாகுளம் சென்றடையும் எர்ணாகுளத்தில் இருந்து, செப்., 12, மாலை, 5:15க்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 5:30 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும் சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, செப்., 10, மாலை, 3:00 மணிக்கு இயக்கப்படும் சுவிதா ரயில், மறுநாள் காலை, 9:05க்கு, கொச்சுவேலி சென்று அடையும்கொச்சுவேலியில் இருந்து, செப்.,11, நண்பகல், 12:40க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், மறுநாள், அதிகாலை, 5:25 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இந்த ரயில்களுக்கான முன்பதிவு, இன்று 30ல் துவங்குகிறது.