Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் ... ஹயக்கிரீவர் கோவிலில் 10 நாள் உற்சவம் துவக்கம் ஹயக்கிரீவர் கோவிலில் 10 நாள் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல், மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல், மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 செப்
2019
05:09

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு 16 வகை அபிஷே கம் நடந்தது. சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயிலில் சவுக்கு மரம், மலர் செடிகளால் வனத்திற்குள் விநாயகர் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில் விநாயகர் வீதியுலா நடந்தது.

* பழநி:  பழநி முருகன் கோயில் மலையில் ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம்சாத்தி சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.  

காந்திரோடு பட்டத்து விநாயகர்கோயில், சண்முகபுரம் தமிழ்இலக்கியமன்ற சித்தி விநாயகர் கோயில் விநாயகருக்கு சிறப்பு யாகபூஜை, அபிஷேகம் நடந்தது. யானை கஸ்துாரிக்கு முகப்புபட்டம், காலில் கொழுசு அணிவித்து தேங்காய் பழத்துடன் தீபாராதனை நடந்தது.

மாலை சாயரட்சை பூஜையில்  விநாயகர் சப்பரத்தில் உலா வந்தார். சரவணப்பொய்கை விநாயகர், அபரஞ்சி விநாயகர், கிரிவீதியில் தலைவலி போக்கும்விநாயகர், நினைத்ததை முடிக்கும் விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பலர் பங்கற்றனர். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.

விஸ்வஇந்துபரிசத், இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துஅமைப்புகள் சார்பில், கணபதிபூஜை செய்து, பல்வேறு இடங்களில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகளை எடுத்து செல்லப் பட்டன.

* வத்தலக்குண்டு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வத்தலக்குண்டு பட்டிவீரன்பட்டி நிலக்கோட்டை பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கிராமங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டன. வத்தலக்குண்டு காந்திநகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தெப்பத்துபட்டியில் விளக்கு பூஜை நடந்தது. பட்டிவீரன்பட்டி பகுதியில் விநாயகர் சிலை களுக்கு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. நிலக்கோட்டை மற்றும்  கிராமங் களிலும் பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினர்.

வத்தலக்குண்டு மயில் விநாயகர்  விசாலாட்சி அம்மன் கோவில் மாரியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோயில் எட்டடி பிள்ளையார் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஆராதனை நடந்தது. கீழக் கோவில்பட்டியில் விநாயகருக்கு 16 வகையான பூஜைகள் நடத்தி கிராமத்தினர் வழிபட்டனர்.

* வடமதுரை:  வடமதுரை, தென்னம்பட்டி, அய்யலுார், மூக்கரபிள்ளையார் கோயில், காணப் பாடி, எரியோடு, குளத்துார் உள்ளிட்ட பகுதி கிராமங்களில் அமைந்துள்ள விநாயகர் கோயில் களில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் நடந்தன. மடத்துக்கடை விநாயகர் கோயிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷே கங்கள் நடந்தன. சதுர்த்தி விழாவிற்காக வடமதுரை போலீஸ் சரக பகுதியில்  72, எரியோடு பகுதியில் 44 என 116 இடங்களில் பல்வேறு அமைப் புகள், பொதுமக்கள் சார்பில்  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

* கன்னிவாடி:  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பாலாபிஷேகம் செய்யட்டு, மலர்களால் ராஜ அலங் காரம் செய்யப்பட்டிருந்தது.

* செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar