Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெங்கமலையில் நீருக்குள் ... மகாளய பட்சம்: கயாவில் குவிந்த பக்தர்கள் மகாளய பட்சம்: கயாவில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர்
எழுத்தின் அளவு:
ஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர்

பதிவு செய்த நாள்

14 செப்
2019
11:09

சிவகங்கை: சிவகங்கை அருகே பாசாங்கரையில் உயிர் பிரியாததால், ஜீவசமாதி அடையும் திட்டத்தை சிவபக்தர் இருளப்பசாமி 77, கைவிட்டார். இரவு முழுவதும் காத்திருந்த  பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
 
சிவகங்கை அருகே பாசாங்கரை சிவபக்தர் இருளப்பசுவாமி 77. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிவன் கனவில் வந்து ஜீவசமாதி அடையுமாறு கூறியதாகவும், செப்.,12 நள்ளிரவு 12:00 முதல் மறுநாள் (செப்.,13) காலை 5:00 மணிக்குள் இயற்கை மரணம் அடைந்து, சிவலிங்கத்தை கட்டி அணைத்தபடி ஜீவசமாதி அடைய உள்ளதாக அறிவித்தார். பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜீவசமாதிக்கு 10 அடி நீள, அகலமுள்ள குழிதோண்டினர். செப்.,12 இரவு சமாதி அமைய உள்ள இடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.  பக்தர்கள் திருவாசகம், தேவாரப்பாடல் பாடினர்.  மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., மங்களேஸ்வரன் உட்பட  200 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

டாக்டர் சோதனை: செப்.,12 இரவு 10:00 மணியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என செப்.,13 காலை 6:00 மணி வரை இடையமேலுார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்த்குமார், சாமியின் ரத்த ஓட்டம், நாடித்துடிப்பினை  பரிசோதித்தார். ஒரே சீரான ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு இருந்தது. செப்.,13 அன்று காலை 5:00 மணிக்கு பின்னரும் அவர் உயிர் பிரியவில்லை. இதனால் ஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக இருளப்பசுவாமி அறிவித்தார். இரவு முழுவதும் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது: அவரது இடத்தில் ஜீவசமாதி அடைவேன் என அறிவித்தது அவரது விருப்பம். பக்தர்கள் அதிகம் கூடியதால் பாதுகாப்பு கருதி எனது தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அவர் திட்டத்தை கைவிட்டதால், வீட்டிற்கு அனுப்பினோம்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar