Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு நாகர் ஆலயத்தில் காயத்ரி ... ஓசூரில் மோடி பிறந்தநாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் பயணத்திற்குஅரசின் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:09

ராமநாதபுரம் : கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20 ஆண்டின் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால், நபர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள் புனித பயணம் மேற்கொள்ள அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மத தொடர் புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த பயணம் செப்., 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்பபடிவம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம்.

www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்படிவத்தை தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. புனித பயணம் செல்ல விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறு பான்மையினர்நலத்துறை, கலசமஹால் பராம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு செப்.,30க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், என்ற முகவரியிலோ 044 - 2852 0033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar