விழுப்புரம் பொம்பூர் திருவிழா பிரச்னை அமைதிக் கூட்டத்தில் சுமூக தீர்வு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2019 02:09
விழுப்புரம்: பொம்பூர் கிராம கோவில் திருவிழாவில் ஏற்பட்ட இருதரப்பு மோதல் பிரச்னைக்கு அமைதிக்கூட்டத்தில் சுமூக தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அமைதி கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திண்டிவனம் டி.எஸ்.பி., கனகேஸ்வரி, வானுார் தாசில்தார் தங்கமணி முன்னிலை வகித்தனர்.
அப்போது, வரும் காலங்களில் கோவில் திருவிழாவின்போது, எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது. வழக்கம் போல் சுவாமி ஊர்வலம் தேரடி வழியாக பட்டாசு வெடிக்காமல் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதை இருதரப்பை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர்.குடிமை பொருள் தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சாதீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.