Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி நவராத்திரி ... எலுமிச்சை மாலை விலை உயர்வு: பக்தர்கள் தவிப்பு எலுமிச்சை மாலை விலை உயர்வு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம்

பதிவு செய்த நாள்

19 செப்
2019
11:09

சிவகாசி : சிவகாசி ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை, மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது.சிவகாசி பி.கே.என்., ரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ பேச்சியம்மன் கோயில். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யவும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவும், பணப்பற்றாக்குறை நீங்கவும், நகரில் தொழில் விருத்தி அடையவும் அம்மனுக்கு ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் 108 குத்து விளக்கு பூஜை நடந்தது. பெண்கள் கலந்து கொண்டனர். பொதுவாக கோயிலை வாழை, தோரணம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்வர். ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய அலங்காரத்தில், கோயில் முழுவதும், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது.

10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளால் கோயில், அம்மன் சன்னதி அலங்கரிக்கப் பட்டது. இதற்காக 7 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப் பட்டதை ஆச்சர்யத்துடன் பார்த்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.கோயில் ஐயர் ஸ்ரீகார்த்திகேயன்: மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவும், தொழில் விருத்தி அடையவும் அம்மன் மற்றும் கோயிலுக்கு ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களிடம் பணம் வசூல் செய்து இந்த அலங்காரம் செய்யப்பட்டது.ரூபாய் நோட்டுகளால் ஐஸ்வர்ய அலங்காரம் செய்ய ஒரு வாரம் தேவைப்பட்டது. பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பணம் வழங்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar