Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முந்திரி மாலையுடன் பவள வண்ண பெருமாள் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவிலில் 64 பைரவர்கள் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
அகத்தீஸ்வரர் கோவிலில் 64 பைரவர்கள் சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

23 செப்
2019
12:09

திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், 64 பைரவர்களுக்கு, தனித்தனியாக, யாக சாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, 10வது ஆண்டாக, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 64 பைரவர்களுக்கு சிறப்பு யாகம் நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கும், தனித்தனியாக யாகசாலை மற்றும் கலசங்கள் அமைக்கப்பட்டன.நேற்று முன்தினம், ஸ்ரீருத்ர த்ரிசதி ஹோமம், ரஷா பந்தனம் மற்றும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, நான்கு கால யாக பூஜைகள், வடுக பைரவர் பூஜை நடந்தன.பின், 64 பைரவர்களுக்கும், ஸ்ரீ மகா வடுக யாக சாலை பூஜைகளை, 64 சிவச்சாரியார்கள் நடத்தினர்.அனைத்து கலசங்களும் ஊர்வலமாக புறப்பட்டு மூலவர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்பாளுக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, கேரள வாத்தியங்களுடன் பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், சென்னை, திருவள்ளூர், வேலுார் மற்றும் சித்துார் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar