Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் சிலை கோயிலில் ஒப்படைப்பு மாமல்லபுரம் சிற்பங்களுக்கு கம்பி தடுப்பு மாமல்லபுரம் சிற்பங்களுக்கு கம்பி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதர் பட்டு வஸ்திரங்கள் எங்கே?: போலீசில் பக்தர் புகார்
எழுத்தின் அளவு:
அத்தி வரதர் பட்டு வஸ்திரங்கள் எங்கே?: போலீசில் பக்தர் புகார்

பதிவு செய்த நாள்

24 செப்
2019
12:09

காஞ்சிபரம்: அத்தி வரதர் வைபவத்தின்போது, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களுக்கு ரசீது போடாமல், கையாடல் செய்யப்பட்டிருப்பதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் துவங்கி, ஆக., 17ல் முடிந்தது. இந்நிகழ்வில், 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். வைபவத்தின்போது, நாள்தோறும், அத்தி வரதருக்கு, பல வண்ணங்களில் பட்டாடைகள் அணிவிக்கப்பட்டன. அந்த பட்டாடைகள் தற்போது யாரிடம் உள்ளது, முறையாக ரசீது போடப்பட்டு அவை சுவாமிக்கு செலுத்தினரா என்பது குறித்து, கேள்வி எழுந்தது.

இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், வரதராஜ பெருமாள் கோவில் பொது தகவல் அலுவலருக்கு மனு செய்திருந்தார். ஆனால், அவர்கள் முறையாக பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, வரதர் கோவில் செயல் அலுவலர், தியாகராஜனுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பினார். அதில், ‘முறையாக தகவல் அளிக்காததால், உங்கள் மீது, ஏன், குற்ற வழக்கு தொடர கூடாது. இது குறித்து, 7 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார். ஆனால், செயல் அலுவலர் பதில் அளிக்காததால், விஷ்ணு காஞ்சி போலீசில், நேற்று, டில்லிபாபு புகார் அளித்தார்.

அவர் அளித்துள்ள புகார் மனு விபரம்: அத்தி வரதர் வைபவத்தின் போது, ஒவ்வொரு நாளும் அணிவிக்கப்பட்டு வந்த, பட்டு வஸ்திரங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான இதர பட்டு வஸ்திரங்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இந்த வஸ்திரங்கள், ரசீது போட்ட பிறகே, சுவாமிக்கு அணிவிக்கப்பட வேண்டும் என்பது அறநிலையத் துறை விதி. ஆனால், திட்டமிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு வஸ்திரங்கள் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, கோவில் செயல் அலுவலர், தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்து, வஸ்திரங்களை மீட்டு, கோவிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar