Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் ... தி.மலை அருணாசலேஸ்வரர் நவராத்திரி விழா: 29ல் துவக்கம் தி.மலை அருணாசலேஸ்வரர் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பயணத்துக்கு ஒரே முன்பதிவு: தேவசம்போர்டு
எழுத்தின் அளவு:
சபரிமலை பயணத்துக்கு ஒரே முன்பதிவு: தேவசம்போர்டு

பதிவு செய்த நாள்

27 செப்
2019
11:09

நாகர்கோவில்: சபரிமலை பயணத்துக்கு, மூன்று விதமான முன்பதிவு இருப்பது மாற்றப்பட்டு, பக்தர்கள், ஒரே முன்பதிவில், சபரிமலைக்கு செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பத்மகுமார் தெரிவித்தார்.

ஆலோசனை: பத்மனாபபுரத்தில் அவர் கூறியதாவது:சபரிமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் இறங்கி, பின், கேரள அரசு பஸ்சில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என முடிவு செய்து, கடந்த சீசனில் அது அமல்படுத்தப் பட்டது.ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி, பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம். இந்நிலையில், பயணம், தரிசனம், அறை முன்பதிவு, வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள், அவரவர் வீடுகளில் இருந்து, இந்த முன்பதிவை செய்ய முடியும். அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கு, நிலக்கல் மற்றும் பம்பையில், தேவசம்போர்டு சார்பில் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம், சபரிமலைக்கு யார் வருகின்றனர், எத்தனை பேர் வருகின்றனர் என்பதை அறிய முடியும்.ஓரிரு நாட்களில், தேவசம்போர்டு மற்றும் போலீஸ் துறையின், ஐ.டி., வல்லுனர்கள் கூடி, இதை முடிவு செய்வர். விழிப்புணர்வு பிரசாரம்அதன் பின், அனைத்து மாநிலங்களிலும், இது பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும். முன்பதிவு கட்டாயம் என்பது உடனடியாக அமலுக்கு வராவிட்டாலும், நாளடைவில் அது கட்டாயமாக்கப்படும்.முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாவிட்டால், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் ஆராயப்படும்.முன்பதிவுக்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால், முன்பு போல, பம்பையில் பெண்களை தடுக்க, தேவசம்போர்டு ஊழியர்களைநியமிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar