Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலையில் கந்தசஷ்டி கவச வரிகளை ... வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயில் விழா வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்மபுரி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

27 செப்
2019
12:09

தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்  நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, மாலை, 4:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு மேல் மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன.

* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar