Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி வெள்ளி வழிபாடு: கோபி ... தாயமங்கலம் கோயிலில் நவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2019
02:09

சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, நாளை (செப்., 29ல்) கோலாகல மாக துவங்குகிறது.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நீண்ட இடைவெளிக்கு பின், நவராத்திரி விழா,  விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாளை செப்., 29ல் முதல், அக்., 8ம் தேதி வரை, ’சக்தி கொலு’ எனும் பெயரில், கொலு வைக்கப்படுகிறது.

விழா நாட்களில், தினமும் காலை, 11:00 மணி முதல், 11:30 மணி வரை, லலிதா  சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி  வரை, வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது.அதைத்  தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம
பாராயணம் நடக்கிறது.

காலை, 11:30 மணிமுதல், 12:00 மணி வரையிலும், மாலை, 6:30 மணி முதல்,  7:00 மணி வரை யிலும், சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.தினமும் மாலை,  4:00 முதல், 6:00 மணி வரை, இசை கச்சேரி நடக்கிறது. இரவு, 7:00 மணி  முதல், 7:30 மணி வரை, பக்தர்களின் கொலு பாட்டும், பல்வேறு தலைப்புகளில்,  அறிஞர்களின் சொற்பொழிவும் நடக்கிறது.

நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு, அக்., 4ம் தேதி காலை, 7:30 மணி முதல், 12:30 மணி வரையிலும், மாலை, 4:30 மணி முதல், 8:30 மணி வரையிலும், ஏகதின லட்சார்ச் சனை நடக்க உள்ளது. இதற்கு கட்டணமாக, 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்புவோர், கோவிலில் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்றுக்  கொள்ளலாம்.   நவராத்திரியின் நிறைவு நாளான, அக்., 8ம் தேதி, ’வித்யாரம்பம்’  எனும் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை  நடக்கிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள  குழந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை துவக்கும் நிகழ்வு நடக்க  உள்ளது.நவராத்திரி விழா நாட்களில், பக்தர்கள் வருகை தந்து, சிறப்பு பூஜை,  நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் கோரிஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. இரவு சந்திரன் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் 9வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் மணிவிழா நவ., 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடைபெறுகிறது.ஏழாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar