Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் நவராத்திரி விழா செல்வி அம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா செல்வி அம்மன் கோயில் முளைக்கொட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரமாண்ட கொலு காண வடபழநியில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2019
11:10

சென்னை:வடபழநி ஆண்டவர் கோவிலில், சக்தி கொலுவை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதில், பார்வையற்ற மாணவியின் பாட்டு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி நான்காம் நாள் விழா, கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று, கொலுவை பார்வையிட்டார்.

Default Image
Next News

பிரமாண்ட கொலு: சக்தி கொலு குறித்து கூறியதாவது:வடபழநி ஆண்டவர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன், சிறிய அளவில் கொலு வைக்கப்பட்டு இருந்தது.இக்கோவில் தக்காராக பொறுப்பேற்றுள்ள ஆதிமூலத்தின் தனி முயற்சியால், பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த பொம்மைகள், கொலுவை அலங்கரித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். முதல்வரின் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், நடிகை லதா, ஆச்சி மசாலா நிறுவனர் பத்ம சிங் ஐசக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கொலுவை பார்வையிட்டனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, மரியாலையா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.

பார்வையற்ற மாணவி: மாலை, 5:30 மணி முதல், 6:00 மணி வரை, வேத பாராயணம், ஸ்ரீருத்ரம்,சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. தொடர்ந்து, லலிதாசகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மாலை நடந்த பொதுமக்கள் கொலு பாட்டில், அரசு இசைக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமா படிக்கும், பார்வையற்ற மாணவி பிரியவதனாவின் பாட்டு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாலை, 7:00 மணிக்கு, நற்பண்பை பெற சக்தி கொடு எனும் தலைப்பில், நாகை முகுந்தனின் சொற்பொழிவு நடந்தது. இதற்கிடையே, மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வடபழநிஆண்டவர் கோவில் மாடவீதிகளை, நேற்று காலை, தன்னார்வலர்கள் துாய்மைப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டார பகுதி மக்கள், வடபழநி புத்துார் கட்டு மருத்துவமனை குடும்பத்தினர், ராம்கே நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் இணைந்து செயல்பட்டனர். பின், பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar