Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழாவில் அம்பாள் சிறப்பு ... சேலத்திலிருந்து 5 டன் பூக்கள் திருமலைக்கு அனுப்பி வைப்பு சேலத்திலிருந்து 5 டன் பூக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

03 அக்
2019
12:10

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.அவலுார்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 30ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது.

2ம் நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மன் காயத்ரி அன்னை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருக்கோவிலுார்ஞானானந்த தபோவனத்தில், சரத் நவராத்திரி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. விழாவின் 5ம் நாளான நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீசக்கர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, மேருவிற்கு லட்சார்ச்சனை, ஞானாம்பிகை, ஞான மகாலட்சுமி, ஞான துர்க்காதேவிக்கு த்ரிசதி, சஹஸ்ர நாமார்ச்சனை சகல உபசாரங்களுடன் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதியும், விஜயதசமி தினமான 8ம் தேதி காலை 5:00 மணிக்கு துவங்கி 11:30 மணி வரை சுவாகினி, தம்பதி பூஜையுடன், நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar