Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கபாலீசுவரர் கோவிலில் தீர்த்தவாரி ... கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவில் தெப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2012
11:04

வடபழனி:முருகனுக்கு சிறப்பு அலங்காரம், தெப்பத்திற்கு மின் விளக்கு அலங்காரம், வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரி என, வெகு விமரிசையாக நடைபெற்ற, வடபழனி முருகன் கோவில் தெப்பத் திருவிழாவை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். வழக்கம்போல், இந்த ஆண்டு கடந்த, 28ம் தேதியன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் பங்குனி உத்திர விழா துவங்கியது. தொடர்ந்து லட்சார்ச்சனை நடத்தப்பட்டு, கடந்த 5ம் தேதி பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது.

இதற்காக, வடபழனியை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்காவடிகள் எடுத்து வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பங்குனி உத்திர விழாவின் சிறப்பு அம்சமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும் தெப்பத் திருவிழா, நேற்று இரவு நடைபெற்றது.இதற்காக, முதல் நாளான நேற்று, வடபழனி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, புறப்பாடு செய்யப்பட்ட முருகன், கோவில் வளாகத்தைச் சுற்றி வந்து, பின் தெப்பத்தில் இரவு, 7.30 மணிக்கு புறப்பாடு நடந்தது. இதற்காக, வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரி உள்ளிட்டவையுடன், அலங்கார மின் விளக்கில் தெப்பம் ஜொலித்ததை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.தெப்பத்தில் இரண்டாம் நாளான இன்று, சண்முகர் வள்ளி தெய்வானை புறப்பாடும், நாளை சுப்ரமண்யர், வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் துணை ஆணையர் காவேரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar