Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடலுாரில் வள்ளலார் வருவிக்க சிறப்பு ... கீழடியில் பாதுகாப்பு ஏற்பாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
எழுத்தின் அளவு:
பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

பதிவு செய்த நாள்

04 அக்
2019
04:10

உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தங்கக் கருட சேவையில் சுவாமி உற்சவம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுக்கா பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ம் தேதி காலை 7.30 மணிக்கு த்வஜாரோஹணம் திருப்பல்லக்கும், பகல் 12 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம், இரவு சந்திரபிரபையிலும், சுவாமி வீதியுலா நடந்தது. 1 ம் தேதி காலை திருபல்லக்கு திருமஞ்சனம், இரவு ஹனுமந்த வாகனத்திலும், 2ம் தேதி காலை திருபல்லக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது.

விழாவின் 4 நாளில் காலை திருப்பல்லக்கில் பெருமாள், நாச்சியார் திருக்கோலத்திலும், பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம் நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். 7 ம் தேதி காலை 6 மணிக்கு திருமஞ்சனமும், ரதோற்சவம் நடக்கிறது. பெருமாள் தேரில் இருந்து புறப்பாடும், பக்தி உலாத்துதல், திருமஞ்சனம் நடக்கிறது. 9ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம், 10ம் தேதி மாலை 4 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar