Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தானே புயல் 100ம் நாள் நிறைவு: தியாகவல்லியில் மரத்திற்கு பூஜை! தானே புயல் 100ம் நாள் நிறைவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
11:04

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோவிலில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர், திருமணக் கோலத்தில், மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோவிலில் இருந்து புறப்பாடகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சொக்கநாதர், சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை, சுப்பிரமணிய சுவாமி வரவேற்றபின், கோவில் ஒடுக்க மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இன்று காலை 6 மணிக்கு, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருக்கல்யாணம்: கண்ணூஞ்சல் நிகழ்ச்சி முடிந்து, ஆறு கால் பீடத்தில் முதலில் மீனாட்சி அம்மன், அடுத்ததாக பிரியாவிடை, சொக்கநாதரை தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். தங்கம், வெள்ளி குடங்களில், புனித நீர் நிரப்பி, யாக சாலை பூஜைகள் நடந்தன. மாங்கல்ய பூஜைகளுக்குப் பின், சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. மாப்பிள்ளை பிரதிநிதியாக, நீலகண்டன், மணப்பெண் பிரதிநிதியாக, செல்லப்பா சிவாச்சார்யார்கள் மாலை மாற்றினர். சுப்பிரமணிய சுவாமிக்கு வெண் பட்டும், தெய்வானைக்கு பச்சை பட்டும் சாத்துப்படியானது. மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடையிடம், திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு, பகல் 12.04 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்த பின், தீபாராதனைகள் நடந்தன. இரவு 8 மணிக்கு, 16 கால் மண்டபம் முன், வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, பூ பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர். அங்கு, மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து, வீதி உலா நிகழ்ச்சியில், சுவாமி அருள் பாலித்தார். இன்று காலை 6 மணிக்கு, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

குன்றத்து கோயிலுக்கு திருக்கல்யாண சீர்வரிசை: திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்த திருக்கல்யாணத்திற்கு சோலைமலை முருகன் கோயிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. அறநிலைய துறை உதவிகமிஷனர் ராஜமாணிக்கம் தலைமையில்,அழகர் கோயில் பி.ஆ ர்.ஒ.,நல்லதம்பி மற்றும் கோயில் பணியாள ர்கள்,பட்டுப் புடவைகள்,வேஷ்டிகள்,வளையல்கள், மஞ்சள் கிழங்கு,குங்குமம்,தேங்காய் உட்பட பல்வேறு மங்கலபொ ருட்களை மணமக்களுக்கு சீர்வரிசையாக கொண்டு வந்தன ர்.மணமேடையில்,மீனாட்சி அம்மனுக்கு நீலம்,பிரியாவிடைக்கு வாடாமல்லி , தெய்வானைக்கு ஆரஞ்ச் பட்டுகளு ம்,சுந்தரேஸ்வரர், சுப்பிரமணியசுவாமிக்கு வெண் பட்டும் சாத்து ப்படியானது. பக்தர்கள் கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தன ர்.அவர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar