Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி வடபத்ரசயனர் கோயிலில் செப்பு ... குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா கோலாகலம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

09 அக்
2019
11:10

விழுப்புரம் : விழுப்புரம் அருகே, பல்லவர் காலத்தைச் சேர்ந்த அய்யனார், கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் அருகே உள்ள, ஆனாங்கூர் மற்றும் சரவணப்பாக்கம் ஆகிய கிராமங்களில், எழுத்தாளர் செங்குட்டுவன், வரலாற்று ஆர்வலர் விஷ்ணு ஆகியோர், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவர் கால அய்யனார், கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து, செங்குட்டுவன் கூறியதாவது: விழுப்புரம் நகரின் கிழக்கே, 5 கி.மீ.,யில், ஆனாங்கூர் கிராமம் உள்ளது. இங்கு ஏற்கனவே, கி.பி., 6 - 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, முருகன் உள்ளிட்ட தெய்வ சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வூர் ஏரிக்கரையில், தனியாருக்கு சொந்தமான கோவிலில், சமீபத்தில் கள ஆய்வு நடைபெற்றது. அப்போது, கி.பி.,8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டது. விழுப்புரம் அடுத்த திருவெண்ணைய்நல்லுார் அருகே, சரவணப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ள சிற்பத்தை, அப்பகுதி மக்கள், காளி என வணங்கி வருகின்றனர். 3 அடி உயரத்தில், எட்டுக் கரங்களுடன் கூடிய கொற்றவை சிற்பம், கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இது, கி.பி.,8ம் நுாற்றாண்டான, பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இச்சிற்பங்களை, உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். மேலும், ஆனாங்கூர் பகுதியில் தொல்லியல் துறையினர் முறையான ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar