Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் ... நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

10 அக்
2019
11:10

திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவுற்றது. திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா, செப்., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நவராத்திரி நாட்களில், உற்சவ தாயார், தபசு, பராசக்தி, நந்தினி, பத்மாவதி, கவுரி, ராஜராஜேஸ்வரி, உமா மகேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார்.

கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, சந்திரசேகரர் – திரிபுர சுந்தரி தாயார், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, வீதி உலா வந்து, அப்பர் சாமி கோவில் தெரு, விநாயகர் கோவில் முன், வாழை மரத்தை வெட்டும்,  பரிவேட்டை நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, சப்பரத்தில் எழுந்தருளிய தியாகராஜர், வசந்த தீர்த்த குளம் சுற்றியும், வடிவுடையம்மன் சன்னிதி எதிராகவும், திருநடனம் புரிந்ததுடன், மாடவீதி புறப்பாடாகினார். மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ தாயார், மாடவீதி உலா வந்து, கோவில் வளாக கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின், கொடியிறக்கத்துடன், நவராத்திரி திருவிழா நிறைவுற்றது. அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலிலும், நவராத்திரி திருவிழா, கடைசி நாளில், உற்சவ தாயார், புஷ்ப அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னியம்மன் கோவில், நவராத்திரி கடைசி நாளில், உற்சவ தாயார், பரிவேட்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar