Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயலில் ராமர் உலா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்க குடையுடன் வந்த பெருமாள்
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷம் முழங்க குடையுடன் வந்த பெருமாள்

பதிவு செய்த நாள்

13 அக்
2019
04:10

பல்லடம்: பல்லடம் காரண பெருமாள் கோவிலில், மழையிலும், உற்சவ மூர்த்தி கோவிந்தா கோஷம் முழங்க குடையுடன் வலம் வந்தார். புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், சனிக்கிழமை வழிபாடு விமரிசையாக நடந்து வந்தது.

நேற்று, பல்லடம் பனப்பாளையம் காரணப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது. அதை முன்னிட்டு, இரவு, 8 மணிக்கு, உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா புறப்பட்டார். திருவீதி உலா முடிந்து, கோவிலுக்கு திரும்புவதற்குள், மழை பெய்ய துவங்கியது. மழை அதிகரித்த நிலையில், பக்தர்கள் உற்சவ மூர்த்தியை வேகமாக இழுத்து வந்தனர். மழையால், உற்சவமூர்த்தி நனையாமல் இருக்க வேண்டி, பக்தர்கள் குடையால் பாதுகாப்பு அளித்தனர். பக்தர்களும், அர்ச்சகர்களும், மழையில் நனைந்த நிலையிலும், கோவிந்தா கோஷம் முழங்க, உற்சவ மூர்த்தியை நிலைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். சமீப நாட்களாக கோவில்களின் மழை வேண்டி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, மழை வந்து குளிர்வித்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காரணப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar