Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் ... 108 லிங்கத்துடன் பழநியில் பவுர்ணமி கிரிவலம் 108 லிங்கத்துடன் பழநியில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா கோவில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அய்யா கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 அக்
2019
12:10

மணலிபுதுநகர்: அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின், 10 நாள் திருவிழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழா நாட்களில் உற்சவர், காளை, அன்னம், மயில், மலர்முக சிம்மாசனம், காளை, கருடர், ஆஞ்சநேயர், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பதிவலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, அய்யா திருத்தேரோட்டம், நேற்று மதியம் நடைபெற்றது.  வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 36 அடி உயர, பிரமாண்ட தேரில், அய்யா வைகுண்ட தர்மபதி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அமைச்சர், பாண்டியராஜன் உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலையில், தேர் நிலையை அடைந்தது. அதை தொடர்ந்து, அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் நிகழ்வு; பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு போன்றவை நடந்தன. பின் இரவில், அகண்ட நாமம், அய்யா பூப்பல்லக்கில் பதிவலம் வருதல், திருநாமக்கொடி அமர்தல் நிகழ்வுடன், திருவிழா நிறைவுற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar