Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வசதி பெருகும் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
16:13

சுக்கிரன் அக்.28 வரை நன்மை தருவார். குரு அக்.28 முதல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மேலும் சனி,கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.  பெண்களால் நன்மை சேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். பொருளாதார வளம் கூடும். பொன், பொருள் கிடைக்கும். சகோதர வழியில் நன்மை கிடைக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும். இளைய சகோதர வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

கடந்த மாதம் அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு மறையும். சூரியனால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. அவப்பெயர் வரலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதனால் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் நவ.12க்கு பிறகு குணமாகும். பயணத்தின் போது கவனம் தேவை. பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர் ஆதரவு கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம்.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.
வியாபாரிகள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அக்.28க்கு பிறகு புதிய முயற்சி வெற்றி பெறும்.
தரகு, கமிஷன் தொழில் செய்பவர்கள் எதிரிகளின் சதி திட்டத்தை முறியடிப்பர்.
அரசு பணியாளர்களுக்கு குருவால் ஏற்பட்ட தடை அனைத்தும் அக். 28க்கு பிறகு மறையும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
ஐ.டி., துறையினருக்கு மாத பிற்பகுதியில் பதவி உயர்வு கிடைக்கும்.
வக்கீல்கள் அக்.28க்கு பிறகு எதிரி இடையூறை முறியடிப்பர். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
ஆசிரியர்களுக்கு அக்.28க்கு பிறகு வேலைப்பளு குறையும். சிலர் பதவி உயர்வு கிடைக்க பெறுவர்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும்.  
அரசியல்வாதிகளுக்கு நவ.12 க்கு பிறகு தலைமையிடம் செல்வாக்கு கூடும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
கல்லூரி மாணவர்கள் அக்.28க்கு பிறகு போட்டிகளில் வெற்றி காண்பர்.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு அக்.28க்கு பிறகு கூட்டாளிகள் வகையில் தொல்லை, நெருக்கடி வரலாம்.
வியாபாரிகள் சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.
பணியாளர்களுக்கு பணிச்சுமையால் அவ்வப்போது உடல்நலக்குறைவு வரலாம்.
மருத்துவர்கள் சக மருத்துவர்களால்  மன உளைச்சலுக்கு ஆளாவர்.  
ஆசிரியர்கள் மாத முற்பகுதியில் திடீர் பயணம் செல்ல நேரிடும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு நவ.12க்கு பிறகு முயற்சியில் தோல்வி ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் தொண்டர்கள் வகையில் செலவழிக்க வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு அக்.28க்கு பிறகு மறைமுகப் போட்டி குறுக்கிடும். சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம்.
விவசாயிகள் மஞ்சள், பாசி பயறு நெல், உளுந்து, சோளம் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
மாணவர்கள் நட்பு விஷயத்தில் விழிப்புடன் இல்லாவிட்டால் சிரமம் தான்.  

* நல்ல நாள்: அக்.21,22,23, 24, 25,30,31 நவ.1,2, 6,7,11,12
* கவன நாள்: அக்டோபர் 26,27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: சிவப்பு, கருப்பு

* வழிபாடு
●  புதன்கிழமை மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.