Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஐப்பசி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை திறப்பு ஐப்பசி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை ...  பழங்கால கல்வெட்டுகள் டிஜிட்டல் மயமாகின்றன பழங்கால கல்வெட்டுகள் டிஜிட்டல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த 13ம் நூற்றாண்டு சிவன் கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
12:15

 சிவகங்கை,:திருப்புவனம் நெடுங்குளம் அருகே 13ம் நுாற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட சிவன் கோயில் சிதிலமடைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் உள்ளது.நெடுங்குளம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள இக்கோயில் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி, பேராசிரியர் அழகுமணி ஆய்வு மேற்கொண்டனர்.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் ஏற்கனவே இருந்த சிவன் கோயில் அழிந்துவிட்டதால், பாண்டிய மன்னர் அதே இடத்தில் மீண்டும் சிவன் கோயிலை கட்டி அதற்கு தன் பெயராலேயே சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என பெயர் வைத்துள்ளார். அழிந்து போன பழைய சிவன் கோயிலின் சிலைகள், கோயிலை சுற்றி உடைந்த நிலையில் சிதறிக்கிடக்கின்றன.இங்குள்ள நான்கு கல்வெட்டுகளுமே முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகள், இவை 75 சதவீதம் அழிந்துவிட்டன. மீதமுள்ள கல்வெட்டும் சிதையும் நிலையில் உள்ளன. கோயில் நடுமண்டப உள் தென் பகுதியிலும், வெளியே அதிஷ்டான பகுதி குமுத வரிகளிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மாறவர்மன் சுந்தரபாண்டியனில் நேரடி பார்வையில் கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்பர் என்ற திருநாவுக்கரசருக்கு இக்கோயில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்ட செய்தி கல்வெட்டில் உள்ளது. பொன்பற்றி உடையான் பழகிய பெருமாளான விழும்பாத ராயன் என்பவர் இந்தச்சிலையை எடுப்பித்துள்ளார்.

ஆனால் அப்பரின் திருவுருவம் கல்லால் ஆனதா, செம்பால் ஆனதா என்று தெரியவில்லை. திருநெல்வேலியை சேர்ந்த ஆளுடையான் என்பவர் கருங்காலிக்குடியில் பயிர்ஏறி விளைந்த நிலத்தை இறைவனுக்கு தேவதானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்துக்கு கடமை, வினியோகம், அந்தராயம், வெட்டிப்பாட்டம் உள்ளிட்ட வரிகள் இறையிலியாக வரிவிலக்கு அளிக்கப்பட்டன. தேவர்கம்மிகளுக்கும் (அறங்காவலர்), சிவபிராமணர்களுக்கும் சுந்தரபாண்டியனின் அமைச்சர் குருகுலராஜன் கோயிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்காக அளிக்கப்பட்ட கொடையை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவைக்கல புலவர் விழுப்பரையர், அடைக்கலம் தேடிவந்த கொங்கு நாட்டு அரசன் கொங்கராயன் பெயர்களும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.மாறவர்மன் சுந்தரபாண்டியன் தன் படைப்பரிவாரங்களோடு இக்கோயிலுக்கு வந்து தன் மேற்பார்வையிலேயே இக்கொடைகளை அளித்துள்ளார். இக்கல்வெட்டுகள் கி.பி., 1224 மற்றும் 1235 ம் ஆண்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் செப்பேடுகளிலும் செய்தியாக பொறிக்கப்பட்டுள்ளன. அந்த செப்பேடுகள் எங்கு உள்ளதென்று தெரியவில்லை.ஸ்தபதி கார்த்தி கூறியதாவது:தேர்ந்தெடுக்கப்பட்ட கற்களால் அற்புதமாக கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அந்தராளம், நடுமண்டபம் என அழகிய முறையில் அமைக்கப்பட்ட இக்கோயில் பிறகால பாண்டியர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. கோயில் கருவறையில் ஆவுடைப்பகுதி சதுர வடிவில் காணப்படுகிறது. லிங்கம் கிடைக்கவில்லை. பிள்ளையார் சிலையும், திரிசூலக்கல்லும் சிதைந்த நிலையில் வெளியே மண்ணில் புதைந்துள்ளது. விமானம் சிதைந்து போயுள்ளது, என்றார்.அன்னியர் படையெடுப்பால் இப்பகுதியில் முன்னர் வாழ்ந்த மக்கள் ஊரை காலி செய்து சென்றுவிட்டனர். சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகளை தவிர செப்பேடு உள்ளிட்டவை கிடைக்கவில்லை.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியை தொடர்பு கொள்ள: 73391 09733

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, ஊஞ்சல் ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், ... மேலும்
 
temple
தர்மபுரி: ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தர்மபுரி அடுத்த விருபாட்சிபுரம் ராகவேந்திரர் கோவிலில், லட்ச தீபம் ... மேலும்
 
temple
 புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் முக்கிய நகரில் வலம் வந்த, அய்யப்ப தர்ம பிரசார ரதத்தை, பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.